புத்தாண்டுப் பலன்கள் 2017… கணித்தவர் : ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்!

மேஷம்

மந்திரி முதல் அடி மட்டத் தொண்டன் வரை அனைவரின் திரைமறைவு வேலைகளையும் சுட்டிக் காட்டிப் பேசுவதால் உங்களை சிலர் அரைக் கிறுக்கன் என்பார்கள். தாயா, தாரமா என்ற தடுமாற்றம் உங்களுக்கு அடிக்கடி வரும். சடங்கு, சம்பிரதாயங்களை விட சுய கௌரவத்திற்கு முக்கியத்துவம் தருவீர்கள். உங்களின் சுகாதிபதி சந்திரன் உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் நிற்கும்போது இந்த 2017ம் ஆண்டு பிறப்பதால் கடந்த ஆண்டில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களிலிருந்து விடுபடுவீர்கள். சின்னச் சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள்.

உங்களின் ராசிநாதனாகிய செவ்வாய் பகவான் லாப வீட்டில் நிற்கும்போது இந்தாண்டு பிறப்பதால் உங்களின் நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். 16.1.2017 வரை ராசிநாதன் செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து நிற்பதாலும், 17.1.2017 முதல் 26.2.2017 வரை ராசிக்கு பன்னிரெண்டில் மறைவதாலும் முன்கோபம்இ ரத்த சோகை, சகோதரர்களுடன் மனக் கசப்புகள், சிறுசிறு நெருப்புக் காயங்களெல்லாம் வந்துபோகும். 11.4.2017 முதல் 26.5.2017 வரையுள்ள காலகட்டத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாயை சனி பார்ப்பதால் சிறுசிறு விபத்துகள், பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் ஏமாற்றங்கள் வந்துபோகும்.

26.7.2017 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் கேது இருப்பதால் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் அதையெல்லாம் எதிர்த்து நின்று போராடி சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். ராகு 5ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களை திணிக்க வேண்டாம். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னையில் இப்போது தலையிட வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ளாதீர்கள். ஆனால் 27.7.2017 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு ராகு 4ம் வீட்டிலும், கேது 10லும் அமர்வதால் ஓய்வெடுக்க முடியாதபடி அடுத்தடுத்த வேலைபளு இருந்து கொண்டேயிருக்கும்.

புத்தாண்டின் தொடக்கம் முதல் 1.9.2017 வரை உங்களின் பாக்யாதிபதியும் விரயாதிபதியுமான குரு உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் மறைந்து சகட குருவாக அமர்ந்திருப்பதால் பணப் பற்றாக்குறையை போக்க கூடுதலாக உழைப்பீர்கள். நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். பிள்ளைகளால் அலைச்சலும், செலவுகளும் வந்து நீங்கும். ஆனால், 2.9.2017 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் 7ம் வீட்டில் அமர்ந்து உங்களைப் பார்க்கயிருப்பதால் உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும். தள்ளிப் போன திருமணம் கூடி வரும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

குடும்பத்தில், பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். மருத்துவ சிகிச்சைக்குப் பின்னும் குழந்தை பாக்யம் கிடைக்கவில்லையே என வருந்தினீர்களே! இந்த வருடத்தில் வாரிசு உருவாகும். ஆரோக்யம் சீராகும். அடகிலிருந்த நகை, சொத்தையெல்லாம் மீட்க வழி, வகை பிறக்கும். 14.12.2017 வரை சனி 8ல் நின்று அஷ்டமத்துச் சனியாக வருவதால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். ஏமாந்துபோன தொகையை நினைத்து வருத்தப்படுவீர்கள். ஏமாற்றிய நபர்களை நினைத்தும் ஆதங்கப்படுவீர்கள். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்பத்துடன் வெளியூருக்கு செல்லும் முன் சமையலறையில் கேஸ் இணைப்பை சரி பார்த்து விட்டுச் செல்லுங்கள். வருடத்தின் இறுதியில் 15.12.2017 முதல் சனி 9ம் வீட்டில் அமர்வதால் எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். மற்றவர்களின் மனநிலையைப் புரிந்து பேசும் பக்குவம் உண்டாகும். நெருடலான, தர்ம சங்கடமான சூழ்நிலைகளெல்லாம் நீங்கும்.

வியாபாரிகளே! இந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் லாபம் அதிகரிக்கும். என்றாலும் மற்றவர்களின் பேச்சைக் கேட்டு பெரிய முதலீடுகள் போட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். அஷ்டமத்துச் சனி தொடர்வதால் வேலையாட்கள் அடிக்கடி விடுப்பில் செல்வார்கள். எனவேஇ பல நாட்கள் நீங்களே தொழிலாளியாகவும்இ முதலாளியாகவும் இறங்கி வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். புதிய வேலையாட்களை பணியில் அமர்த்தும்போது விசாரித்துச் சேர்ப்பது நல்லது. அவர்களுக்கு அதிகத்தொகை முன்பணமாக தர வேண்டாம். வாடிக்கையாளர்களுடன் போராட வேண்டி வரும். பங்குதாரர்களில் சிலர் தங்களது பங்கை கேட்டு தொந்தரவு தருவார்கள். ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மற்றும் ஜூலை மாதங்களில் கடையை மாற்றுவதுஇ விரிவுபடுத்துவது போன்ற முயற்சிகள் பலிதமாகும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி பிளாஸ்டிக், புரோக்கரேஜ், மின்சார சாதன வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்யோகஸ்தர்களே! உங்களின் உத்யோக ஸ்தானாதிபதி சனி 8ல் நீடிப்பதுடன், ஜூலை 27ம் தேதி முதல் கேது உத்யோக ஸ்தானத்தில் அமர்வதாலும் கூடுதலாக வேலை பார்க்க வேண்டியது வரும். அதிகாரிகளால் மதிக்கப்பட்டாலும் சக ஊழியர்களால் இடையூறுகளை சமாளிக்க வேண்டியது வரும். ஆனாலும், செப்டம்பர் மாதம் முதல் வேலைச்சுமை குறையும். மறுக்கப்பட்ட உரிமைகளும் கிடைக்கும். இடமாற்றமும் கிட்டும்.

கன்னிப் பெண்களே! செப்டம்பர் மாதம் முதல் திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். உங்கள் ரசனைக்கேற்ப நல்ல வரனும் அமையும். என்றாலும், தோலில் தடிப்பு, தேமல், தூக்கமின்மை வந்து செல்லும். பெற்றோரின் ஆலோசனைகள் இப்போது கசப்பாக இருந்தாலும் பின்னர் அது சரியானதுதான் என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

மாணவ மாணவிகளே! சாதித்துக் காட்ட வேண்டுமென்ற வேகம் இருந்தால் மட்டும் போதாது அதற்கான உழைப்பு வேண்டும். சந்தேகங்களை தயங்காமல் கேளுங்கள். ஒருமுறை படித்தால் மட்டும் போதாது. அறிவியல்இ கணித சூத்திரங்களையெல்லாம் எழுதிப் பார்த்து நினைவில் நிறுத்துவது நல்லது. விளையாட்டுப் போட்டிகள், பொது அறிவு போட்டிகளில் பரிசும் பாராட்டும் கிடைக்கும்.

கலைத்துறையினரே! விமர்சனங்களும், கிசுகிசுத் தொந்தரவுகளும் வந்தாலும் அஞ்ச வேண்டாம். உங்களைவிட வயதில் குறைந்த கலைஞர்கள் மூலமாக ஆதாயமடைவீர்கள்.

அரசியல்வாதிகளே! போட்டி, பொறாமையால் தலைமையிடம் சிலர் உங்களைப் பற்றி புகார் பட்டியல் வாசிப்பார்கள். கவனமாக இருங்கள். வருடத்தின் பிற்பகுதியில் மாநில அளவில் பதவிகள் கிடைக்கும்.

விவசாயிகளே! விளைச்சல் சுமாராக இருக்கும். அக்கம் பக்கத்து நிலத்துக்காரர்களிடம் தகராறு வேண்டாம். சின்னச் சின்ன பிரச்னைகளையும் பேசி தீர்க்கப் பாருங்கள். வழக்கு, வியாஜ்யம் என்றெல்லாம் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்காதீர்கள். எண்ணெய் வித்துக்கள்இ சிறு தானிய வகைகளால் ஆதாயமடைவீர்கள். இந்த 2017 ம் ஆண்டு கரடு, முரடான பாதைகளில் உங்களை பயணிக்க வைத்தாலும் அனுபவ அறிவாலும்இ சமயோஜித புத்தியாலும் ஓரளவு முன்னேற்றுவதாக அமையும்.

பரிகாரம்:

மயிலாடுதுறை கும்பகோணம் பாதையில் குத்தாலத்திற்கு அருகேயுள்ள க்ஷேத்ரபாலபுரம் பைரவரை தரிசித்து வாருங்கள். அன்னதானம் செய்யுங்கள்.

ரிஷபம்

வெகுதொலைவிலிருந்து வீசும் வாடைக் காற்றில் கலந்து வரும் பூக்களின் வாசத்தை உணரும் ஆற்றலை கொண்ட நீங்கள், நல்லவர் யார் கெட்டவர் யார் என்பதை பிரித்துப் பார்க்கத் தெரிந்தவர்கள். உங்களுடைய சப்தமாதிபதி செவ்வாயும், ராசிநாதன் சுக்கிரனும் 10ம் வீட்டில் நிற்கும்போது இந்தாண்டு பிறப்பதால் வருடத்தின் தொடக்கமே கொஞ்சம் பரபரப்பாக இருக்கும். வருடப் பிறப்பு முதல் 16.1.2017 வரை செவ்வாயும்இ 27.1.2017 வரை ராசிநாதன் சுக்கிரனும் கேதுவின் பிடியில் சிக்கியிருப்பதால் தொண்டைப் புகைச்சல் சளித் தொந்தரவு, அசதி, சோர்வு, கை, கால் வலி வந்துபோகும். 11.4.2017 முதல் 26.5.2017 வரை உங்களின் சப்தமாதிபதியான செவ்வாயை சனி நேருக்குநேர் பார்க்கயிருப்பதால் இக்காலகட்டத்தில் மனைவிக்கு தலைச்சுற்றல், மூட்டுவலி, முன்கோபம், வேலைச்சுமை வந்துபோகும். அவருடன் வீண் விவாதங்களை தவிர்க்கப் பாருங்கள். சொத்து வாங்குவது, விற்பதில் அலட்சியம் வேண்டாம்.

சந்திரன் உங்களது ராசிக்கு 9ம் வீட்டில் நிற்கும்போது இந்த 2017ம் ஆண்டு பிறப்பதால் தொலைநோக்குச் சிந்தனையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். இழுபறியாக இருந்த வேலைகளெல்லாம் முடிவடையும். அரைகுறையாக நின்ற வீடுகட்டும் பணியை தொடங்குவீர்கள். 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 10ல் கேதுவும்இ 4ம் வீட்டில் ராகுவும் நீடிப்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். உத்யோகத்தில் இடமாற்றங்கள், சம்பள பிரச்னைஇ மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். ஜூலை 27ம் தேதி முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 9ம் வீட்டில் கேது தொடர்வதால் பிதுர்வழி சொத்துப் பிரச்னை தலைதூக்கும். தந்தையாருடன் மனஸ்தாபங்கள் வரக்கூடும். அவருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகள்இ மூட்டுவலி வந்து செல்லும்.

எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். ஆனால்இ ராகு 3ம் வீட்டில் அமர்வதால் பயம்இ படபடப்பு நீங்கும். மனோபலம் அதிகரிக்கும். இளைய சகோதர வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும். ஷேர் மூலம் பணம் வரும். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டு மனை வாங்கும் யோகம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். வீட்டில் தடைபட்டு வந்த சுப நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும். தன்னிச்சையாக செயல்படத் தொடங்குவீர்கள். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்தவர்களெல்லாம் வலியவந்து பேசுவார்கள். தைரியமாக சில முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள். வேற்றுமதம்இ மொழி, இனத்தவர்களால் ஆதாயமடைவீர்கள்.

1.9.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் நிற்பதால் கல்வியாளர்கள்இ அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். குடும்பத்தில் நல்லது நடக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தினருடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள். பூர்வீகச் சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்து கொள்வார்கள். உறவினர்கள் தேடி வருவார்கள். நட்பு வட்டம் விரிவடையும். ஆனால் 2.9.2017 முதல் வருடம் முடியும் வரை குரு 6ம் வீட்டில் மறைந்து சகட குருவாக வருவதால் சின்னச் சின்ன காரியங்களைக்கூட இரண்டுஇ மூன்று முறை முயன்று முடிக்க வேண்டியது வரும்.

எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து விலகும். வி.ஐ.பிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். சட்டவிதிகளை மீறி யாருக்கும் உதவ வேண்டாம். சிலர் தங்களின் ஆதாயத்திற்காக உங்களைப் பற்றிய தவறான வதந்திகளைப் பரப்புவார்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள்இ ஏமாற்றங்கள்இ தோல்விகளை நினைத்து அவ்வப்போது தூக்கம் குறையும். உங்களை நீங்களே குறைத்துக் கொள்ளாதீர்கள். இந்தாண்டு முழுக்க சனி 7ல் நின்று கண்டகச் சனியாகவும்இ வருடத்தின் இறுதியில் 15.12.2017 முதல் 8ல் அமர்ந்து அஷ்டமத்துச் சனியாகவும் வருவதால் கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகத்தை தவிர்க்கப் பாருங்கள். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைதல்இ நகச்சுத்திஇ முடி உதிர்தல்இ அலர்ஜி வந்து நீங்கும்.

வியாபாரிகளே! போட்டிகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். சின்னச் சின்ன நஷ்டங்கள் இருக்கும். ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். விளம்பரத்தையும் பயன்படுத்துங்கள். பிப்ரவரிஇ ஜூலைஇ ஆகஸ்ட் மாதங்கள் உங்களுக்கு ஆதாயம் தரக் கூடியதாக இருக்கும். உணவுஇ மருந்துஇ கட்டுமானப் பொருட்கள் நெல்மண்டி வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பிரச்னைகள் வெடிக்கும். பங்குதாரர்கள் உங்களை கோபப்படுத்தினாலும், அவசரப்பட்டு வார்த்தைகளை விடவேண்டாம். வேலையாட்களும் உங்களுடைய கஷ்ட, நஷ்டங்களை புரிந்து கொள்ளாமல் பொறுப்பற்று நடந்து கொள்வார்கள். வியாபார ரகசியங்களை வெளியில் சொல்ல வேண்டாம்.

உத்யோகஸ்தர்களே! தலைமைக்கு நெருக்கமாவீர்கள். என்றாலும் கொஞ்சம் வேலைச்சுமை, டென்ஷன் இருக்கத்தான் செய்யும். உயரதிகாரி உங்களின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் அளிப்பார். ஜனவரிஇ ஆகஸ்ட்இ நவம்பர் மாதங்களில் புது வாய்ப்புகள் தேடிவரும். சம்பளபாக்கி கைக்கு வரும். இழந்த உரிமையை மீண்டும் பெறுவீர்கள். உங்களுக்குக்கீழ் பணியாற்றும் ஊழியர்களிடம் போராடி வேலை வாங்க வேண்டி வரும். நேரங்காலம் பார்க்காமல் உழைத்தும் எந்த பயனும் இல்லையே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள்.

கன்னிப்பெண்களே! செப்டம்பர் மாதம் வரை போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டு. நல்லவர்களின் நட்பு கிடைக்கும். வேலையும் அமையும். சிலருக்கு திருமணமும் முடியும். இந்தாண்டு முழுக்க சனியின் போக்கு சாதகமாக இல்லாததால் காதலில் ஏமாற்றமும், உயர் கல்வியில் தேக்கமும், மந்தமும் ஏற்படும்.

மாணவ மாணவிகளே! உயர்கல்வியில் அலட்சியப்போக்கு வேண்டாம். தேர்வு நேரத்தில் படித்துக் கொள்ளலாம் என்று தப்புக் கணக்கு போடாதீர்கள். மந்தம்இ மறதி வந்து நீங்கும். விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் கிடைக்கும். நீங்கள் விரும்பிய கல்வி பிரிவில் போராடி இடம் பிடிப்பீர்கள்.

கலைத்துறையினரே! மறைந்துகிடந்த திறமைகள் வெளிப்படும். பெரிய நிறுவனத்திற்கென காத்திருக்காமல் கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்தப் பாருங்கள்.

அரசியல்வாதிகளே! எதிர்கட்சியினரைவிட நீங்கள் இருக்கும் கட்சியில் உங்களுக்கு எதிர்ப்புகள் இருக்கும். சகாக்களிடம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். கௌரவப் பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

விவசாயிகளே! அயராத உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். நெல்இ கரும்பு மற்றும் கிழங்கு வகைகளால் ஆதாயமடைவீர்கள். பழைய கடன்இ பகையை நினைத்து பயம் வரும். இந்தப் புத்தாண்டு உங்களுக்கு நிம்மதியற்றப் போக்கை தந்தாலும், இடம், பொருள், ஏவலறிந்து செயல்பட வேண்டுமென்பதை உணர்த்துவதாகவும் அமையும்.

பரிகாரம்:

தஞ்சாவூர்இ திருவையாறுக்கு அருகேயுள்ள திருப்பூந்துருத்தி தலத்தில் அருளும் வீணாதர தட்சிணாமூர்த்தியை தரிசித்து வாருங்கள். ஏழைகளின் கல்விச் செலவை ஏற்றுக்கொள்ளுங்கள்.

மிதுனம்

இறைவனின் படைப்பில் ஏற்றத் தாழ்வுகள் இல்லை என்பதை அறிந்த நீங்கள், பணம்இ பதவி பார்த்துப் பழக மாட்டீர்கள். எந்த நிகழ்வுகளையும் தொகுத்து கோவையாக வெளியிடுவதில் வல்லவர்கள். உங்கள் ராசிக்கு 9ம் இடத்தில் சுக்கிரன் அமர்ந்திருக்கும் நேரத்தில் 2017ம் ஆண்டு பிறப்பதால் சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். வி.ஐ.பிகளின் அறிமுகம் கிடைக்கும். உங்கள் ரசனைக்கேற்ப வீடுஇ வாகனம் அமையும். நீண்ட நெடுங்காலமாக தள்ளிப்போன காரியங்களெல்லாம் முடிவடையும். வருடப் பிறப்பு முதல் 8ம் தேதி வரை உங்களுடைய ராசிநாதனான புதன் சனியுடன் சேர்ந்து ஆறாம் வீட்டில் மறைந்திருப்பதால் அலர்ஜிஇ யூரினரி இன்ஃபெக்சன்இ நரம்புச் சுளுக்குஇ சளித் தொந்தரவு வந்து போகும்.

11.4.2017 முதல் 26.5.2017 வரை உள்ள காலக்கட்டத்தில் செவ்வாயை சனி பார்ப்பதால் மறைமுக எதிர்ப்புகள்இ பழைய கடனை பற்றிய கவலைகள்இ வீண் டென்ஷன்இ சகோதர வகையில் மனவருத்தம் வந்து நீங்கும். 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 9ல் கேது நிற்பதால் தந்தைக்கு நெஞ்சுவலிஇ பித்தப் பையில் கல்இ சிறுநீரகக் கோளாறு வந்துபோகும். அவருடன் மனவருத்தங்களும் வரக்கூடும். பிதுர்ராஜ்ஜிய சொத்து சம்பந்தப்பட்ட விஷயத்தில் இப்போது தலையிட வேண்டாம். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்தப் பாருங்கள். ஆனால்இ மூன்றாம் இடத்தில் ராகு இருப்பதால் புது முயற்சிகள் பலிதமாகும். இளைய சகோதர வகையில் ஆதரவு பெருகும். வேற்றுமதம்இ மாற்று மொழிப் பேசுபவர்களால் உங்களது வாழ்க்கை தரம் ஒருபடி உயரும்.

ஜூலை 27ம் தேதி முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 2ல் ராகுவும்இ 8ம் வீட்டில் கேதுவும் தொடர்வதால் வீண் விரயம்இ அலைச்சல்இ பொருள் இழப்புகள் வந்து போகும். புத்தாண்டின் தொடக்கம் முதல் 1.9.2017 வரை உங்களின் சப்தமஇ ஜீவனாதிபதியான குரு உங்கள் ராசிக்கு 4ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் எதிர்ப்புகள் அதிகமாகும். விபத்துகள் நிகழக்கூடும். ஆனால், 2.9.2017 முதல் வருடம் முடியும்வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் நுழைவதால் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வீர்கள். வறண்டிருந்த பணப்பை கொஞ்சம் நிரம்ப ஆரம்பிக்கும். குழந்தை பாக்யம் உண்டு. பிள்ளைகளால் மதிப்புஇ மரியாதை கூடும். மகளுக்கு ஏதோவொரு வகையில் தடைபட்டுக் கொண்டிருந்த திருமணம் இப்பொழுது கூடி வரும். மகன் குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்து கொள்வார். வாடகை வீட்டிலிருந்த சிலர் சொந்த வீட்டிற்கு குடி புகுவீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். தங்க ஆபரணங்கள்இ ரத்தினங்கள் வாங்குவீர்கள். குடும்பத்தினருடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று முடிந்து வைத்திருந்த காணிக்கையை செலுத்துவீர்கள். அடிக்கடி தொந்தரவு தந்த வாகனம் இனி சீராக ஓடும். 14.12.2017 வரை சனி பகவான் 6ம் வீட்டிலேயே நீடிப்பதால் எதிர்ப்புகள் குறையும். தொலைநோக்குச் சிந்தனை அதிகமாகும். வெற்றிபெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். பொது விழாக்கள்இ சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிட்டும். நீண்டநாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அதிக வட்டிக் கடனை குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி பைசல் செய்வீர்கள்.

பிதுர்வழி சொத்துப் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலமாக சுமுகத் தீர்வு கிடைக்கும். வழக்கில் வெற்றி உண்டு. தந்தையாரின் ஆரோக்யம் சீராகும். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். புதுவீடு கட்டி குடிபுகுவீர்கள். ஆனால்இ 15.12.2017 முதல் சனி 7ல் அமர்ந்து கண்டகச் சனியாக வருவதால் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் இருவரும் மனம் விட்டுப்பேசி முடிவுகளெடுப்பது நல்லது. மனைவிக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகள்இ முதுகு மற்றும் மூட்டுவலி வந்துபோகும். மற்றவர்களை நம்பி பெரிய முயற்சிகளில் ஈடுபடாதீர்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பாக சட்ட நிபுணர்களை கலந்தாலோசிப்பது நல்லது.

வியாபாரிகளே! அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உங்களுக்கு பின்னால் தொழில் தொடங்கியவர்கள் கூட முன்னேற்றம் அடைந்தார்களே! வட்டிக்கு வாங்கி கடையை விரிவு படுத்தி நஷ்டப்பட்டீர்களே! இனி உங்களின் மாறுபட்ட அணுகுமுறையால் லாபமீட்டுவீர்கள். திடீர் லாபம்இ பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் கூடிவரும். வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர்கள். சந்தையில் மதிக்கப்படுவீர்கள். புதிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். கன்ஸ்ட்ரக்சன்இ பதிப்பகம்இ கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள்இ ஜூவல்லரி வகைகளால் லாபம் உண்டு. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் புரிந்து கொள்ளாமல் அவ்வப்போது பிரச்னை செய்தார்களே! இனி பணிந்து வருவார்கள். விலகிச் சென்ற பழைய பங்குதாரரும் மீண்டும் வந்திணைவார்.

உத்யோகஸ்தர்களே! செப்டம்பர் மாதம் முதல் உங்களின் உத்யோக ஸ்தானாதிபதி குருபகவான் சாதகமாவதால் பணிகளை முடிப்பதிலிருந்த தேக்கநிலை மாறும். வேலைச்சுமையும் குறையும். உங்களை கசக்கிப் பிழிந்துஇ உருக்குலைய வைத்த மேலதிகாரி வேறிடத்திற்கு மாற்றப்படுவார். சகஊழியர்
களும் மதிக்கத் தொடங்குவார்கள்.

கன்னிப் பெண்களே! அடிக்கடி முகம் சோர்ந்து காணப்பட்டீர்களேஇ ஏதோ இனந்தெரியாத கவலை உங்களை வாட்டியதேஇ இனி அவற்றிலிருந்து விடுபடுவீர்கள். உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். காதல் கைக்கூடும். தோழிகளுக்கெல்லாம் திருமணமாகி விட்டதே! நமக்கு இன்னும் ஆகவில்லையே என வேதனைப்பட்டீர்களே! இனி கண்ணுக்கு அழகான கணவர் வந்தமைவார். தாயாருடன் அடிக்கடி மனஸ்தாபங்கள் வந்ததே! அந்தநிலை மாறும். தடைபட்ட உயர்கல்வியை மீண்டும் தொடர்வீர்கள்.

மாணவ மாணவிகளே! அதிகாலையில் எழுந்து படிக்கும் பழக்கத்தை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். கவிதைஇ கட்டுரைஇ இலக்கியப் போட்டிகளிலும் திறமையை வெளிப்படுத்தி பரிசையும் பாராட்டையும் பெறுவீர்கள். உயர்கல்வியில் கூடுதல் மதிப்பெண் எடுத்து பெற்றோரின் தலை நிமிரும்படியாக செய்வீர்கள். எதிர்பார்த்தபடி நல்ல கோர்ஸில் சேருவீர்கள். அயல்நாட்டிற்குச் சென்று படிக்கும் வாய்ப்பும் தேடி வரும்.

கலைத்துறையினரே! மக்கள் மத்தியில் பிரபலமடைவீர்கள். சம்பள பாக்கி கைக்கு வரும். அரசால் ஆதாயமுண்டு. விருதுகளுக்கு உங்களுடைய பெயர் பரிந்துரை செய்யப்படும்.

விவசாயிகளே! காட்டிய இடத்திலெல்லாம் கையெழுத்திட்டு மாட்டிக் கொண்டீர்களே! இனி அடகிலிருந்த பத்திரங்களை மீட்பீர்கள்.

அரசியல்வாதிகளே! புதிய பொறுப்புகளை தலைமை ஒப்படைக்கும். சகாக்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். ஆதாரமில்லாமல் எதிர்கட்சியினரை விமர்சிக்க வேண்டாம். இந்த 2017ம் ஆண்டு உங்களுக்கு ஒருபக்கம் பரபரப்பான வாழ்க்கையைத் தந்தாலும்இ பிற்பகுதியில் சாதனையாளராகவும் மாற்றும்.

பரிகாரம்:

சென்னைக்கு அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூர் தலத்தில் அருளும் ஆதிகேசவப் பெருமாளை தரிசித்து வாருங்கள். ஏழைகளின் மருத்துவச் செலவிற்கு இயன்றளவு உதவுங்கள்.

கடகம்

சாம்பார் முதல் சாட்டிலைட் வரை அனைத்தையும் அறிந்து வைத்திருக்கும் நீங்கள், அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை யூகித்துணரும் ஆற்றல் கொண்டவர்கள். உங்கள் ராசிக்கு 7வது ராசியில் இந்த 2017ம் வருடம் பிறப்பதால் உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிட்டும். அழகு, ஆரோக்யம் கூடும். பாதியிலேயே நின்ற பல வேலைகள் இனி முழுமையாக முடியும். உங்களின் தனாதிபதி சூரியன் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். கம்பீரமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். சி.எம்.டி.ஏ.இ எம்.எம்.டி.ஏ ப்ளான் அப்ரூவல் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள்.

வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். வழக்கு சாதகமாகும். வருடப் பிறப்பு முதல் 16.1.2017 வரை உங்களின் யோகாதிபதி செவ்வாய் 8ல் மறைந்திருப்பதால் ஆரோக்ய குறைவுஇ சிறுசிறு விபத்துகள்இ சொத்துப் பிரச்னைகள்இ பொருள் இழப்புகள்இ பணப் பற்றாக்குறைஇ உடன்பிறந்தவர்களுடன் மனக் கசப்புகள் வந்து நீங்கும். 11.4.2017 முதல் 26.5.2017 வரை உங்களின் யோகாதிபதியான செவ்வாயை சனி பார்க்க இருப்பதால் பெற்றோருக்கு மருத்துவச் செலவுகள்இ மனஇறுக்கம்இ ஏமாற்றங்கள்இ மறைமுக நெருக்கடிகள் வந்துபோகும். 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 2ல் ராகுவும்இ 8ம் வீட்டில் கேதுவும் நிற்பதால் படபடப்புஇ எதிலும் பிடிப்பற்ற போக்குஇ பிறர்மீது நம்பிக்கையின்மைஇ வீண் விரயம் வந்து செல்லும்.

நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப்போய் பொல்லாப்பாக முடிய வாய்ப்பிருக்கிறது. வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. பணப்பற்றாக்குறையால் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும். கண்ணில் சின்னதாக தூசு விழுந்தாலும் அலட்சியமாக இருந்து விடாதீர்கள். மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது. மற்றவர்களை தாக்கிப் பேச வேண்டாம். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்பதைப் புரிந்து கொள்வதில் தடுமாற்றம் வரும். 27.7.2017 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்குள் ராகுவும், 7ல் கேதுவும் தொடர்வதால் எதிலும் ஒருவித பயம், ஒற்றை தலைவலி, செரிமானக் கோளாறு, சிறுநீர் பாதையில் அழற்சிஇ வலிப்பு வந்து செல்லும். புத்தாண்டின் தொடக்கம் முதல் 1.9.2017 வரை உங்களின் சஷ்டம பாக்யாதி பதியான குரு உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் நிற்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப்போய் முடியும். ஒரே நேரத்தில் இரண்டுஇ மூன்று வேலைகளை பார்க்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகும். அவ்வப்போது பலவீனமாக உணருவீர்கள். சிலர் தங்களது காரியம் ஆகும்வரை உங்களை பயன்படுத்திக் கொண்டு வேலை முடிந்தபிறகு கறிவேப்பிலையாய் தூக்கி எறிவதை நினைத்து வருத்தப்படுவீர்கள். தாழ்வு மனப்பான்மை தலை தூக்கும். கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது. இளைய சகோதர வகையில் பிணக்குகள் வரும். விமர்சனங்களைக் கண்டு அஞ்ச வேண்டாம். ஆனால்இ 2.9.2017 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்கு 4ம் வீட்டிலேயே அமர்வதால் இழுபறியாக இருந்த காரியங்களெல்லாம் முடிவடையும். என்றாலும் தாயார் கோபத்தில் ஏதேனும் பேசினாலும் அதை பெரிதுபடுத்திக் கொண்டிருக்காதீர்கள்.

14.12.2017 வரை சனி 5ல் நிற்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். வரன் வீட்டாரைப்பற்றி நன்கு விசாரித்து முடிக்கப் பாருங்கள். மகன் காரண காரியமேயின்றி கோபப்படுவார். பிள்ளைகள் இன்னும் கொஞ்சம் பொறுப்பாக நடந்து கொண்டால் நலமாக இருக்குமே என்று ஆதங்கப்படுவீர்கள். வீண் சந்தேகத்தை தவிர்க்கப் பாருங்கள். மனைவிக்கு கைஇ கால் மரத்துப் போதல்இ கர்ப்பப்பையில் கட்டி வந்துபோகும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீகச்சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைக்காக கோர்ட்டு, கேஸ் என்றெல்லாம் நேரத்தையும்இ பணத்தையும் செலவு செய்து கொண்டிருக்காதீர்கள்.

உறவினர்கள் மத்தியில் உங்களைப்பற்றி வதந்திகள் அதிகமாகும். பால்ய நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். சிலர் உத்யோகம்இ உயர் கல்வியின் பொருட்டு பிள்ளைகளை பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். ஆனால் 15.12.2017 முதல் 6ம் வீட்டில் சனிபகவான் அமர்வதால் எதிர்ப்புகள் அடங்கும். பிள்ளைகளின் பொறுப்பற்ற போக்கு மாறும். அதிக வட்டிக்கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். மனைவியின் ஆரோக்யம் சீராகும். அவருடனான மோதல்கள் விலகும்.

வியாபாரிகளே! ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். புது முதலீடுகளை தவிர்க்கவும். தொடர்ந்து லாபம் பெற முடியவில்லையே என்ற ஒரு கவலைகளும் இருக்கும். ஒரு வாரம் நன்றாக இருந்தால் மறுவாரம் வருமானம் இல்லாமல் போகிறதே என்று நினைத்து கலங்குவீர்கள். வியாபாரத்தை நம்பி ஒரு லோன் வாங்கலாம் என்று நினைத்தால் கூட முடியாமல் போகிறதே நிலையற்ற வருமானமாகி விட்டது என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை அன்பாக நடத்துங்கள். விளம்பரத்தையும் பயன்படுத்துங்கள். அக்டோபர்இ நவம்பர் மாதங்களில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். நண்பர்களின் உதவியுடன் கடையை விரிவுபடுத்துவீர்கள்.

உத்யோகஸ்தர்களே! வேலைச்சுமை அதிகரிக்கும். சில நேரங்களில் அதிகாரிகள் கூடுதலாக உங்களுக்கு வேலைகளை தருவார்கள். சலித்துக் கொள்ளாமல் அந்த வேலைகளை முடித்துக் கொடுப்பது நல்லது. உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் இல்லாமல் போகும்.

கன்னிப் பெண்களே! சமயோஜித புத்தியுடன் நடந்து கொள்ளுங்கள். காதல் விவகாரத்தை தள்ளி வைத்து விட்டு உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். பெற்றோரின் ஆலோசனைக்கு செவி சாயுங்கள். போட்டித் தேர்வுகளில் போராடி வெற்றி பெறுவீர்கள். கல்யாணம் சற்று தாமதமாகி முடியும்.

மாணவ மாணவிகளே! மந்தம்இ மறதி வந்து நீங்கும். மொழிப் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். விரும்பிய பாடப் பிரிவில் கூடுதல் செலவு செய்தும்இ சிலரின் சிபாரிசின் பேரிலும் சேரவேண்டிய சூழ்நிலை உருவாகும். கூடாப் பழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்க்கப் பாருங்கள். விளையாடும்போது சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும்.

கலைத்துறையினரே! கிசுகிசுத் தொல்லைகள் வரும். உங்களுடைய படைப்புகளுக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள்.

அரசியல்வாதிகளே! உங்களின் செயல்பாடுகளை மேலிடம் உற்று நோக்கும். கோஷ்டிப் பூசலில் சிக்காதீர்கள். எதிர்கட்சிக்காரர்களிடம் உங்கள் கட்சி விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

விவசாயிகளே! விளைச்சலை அதிகப்படுத்த நவீனரக உரங்களுடன் இயற்கை உரங்களையும் பயன்படுத்துங்கள். உளுந்து, கீரை, மூலிகை வகைகளால் ஆதாயம் பெறுவீர்கள். இந்த 2017ம் ஆண்டு அவ்வப்போது உங்களை மட்டம் தட்டப்பார்த்தாலும் விடாமுயற்சியாலும்இ கடின உழைப்பாலும் கரைத்தேற்றும்.

பரிகாரம்:

கும்பகோணத்திற்கு அருகேயுள்ள அய்யாவாடி பிரத்யங்கராவை தரிசித்து வாருங்கள். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.

சிம்மம்

சுருக்கென்று சுண்டி இழுக்கும் பேச்சுக்கு சொந்தக்காரர்களான நீங்கள், எந்த வேலையையும் உடனே முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். உருட்டல், மிரட்டலுக்கு அஞ்சமாட்டீர்கள். உங்களுடைய ராசிக்கு 6ம் வீட்டில் சந்திரன் நிற்கும்போது இந்த 2017ம் ஆண்டு பிறப்பதால் உங்களின் நீண்டகால ஆசைகளெல்லாம் நிறைவேறும். கடினமான இலக்கையும் எளிதாக எட்டிப் பிடிப்பீர்கள். உங்களுடைய ராசியை சுக்கிரன் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் உங்கள் செயலில் வேகம் கூடும். ஜூலை 26ம் தேதி வரை ராசிக்கு 7ல் கேதுவும்இ உங்கள் ராசிக்குள்ளேயே ராகுவும் நிற்பதால் மூச்சுத் திணறல்இ ஹார்மோன் பிரச்னைஇ அல்சர்இ ரத்த சோகை வந்து செல்லும். 27.7.2017 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசியை விட்டு ராகு விலகி 12ம் வீட்டிலும், கேது 6ம் வீட்டிலும் தொடர்வதால் மனப் போராட்டங்கள் ஓயும்.

தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த கத்தியாக நெருக்கடிகள் இருந்ததே, அவற்றிலிருந்து விடுபடுவீர்கள். 17.1.2017 முதல் 26.2.2017 வரை உங்களின் யோகாதிபதியான செவ்வாய் பகவான் 8ல் மறைந்து காணப்படுவதாலும் மற்றும் 11.4.2017 முதல் 26.5.2017 வரை உள்ள காலக