திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திர பொது பலன்கள்

திருவோணம்:

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பலன் எதிர்பாராமல் மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணத்தை உடையவராய் இருப்பீர்கள். மற்றவர்கள் தவறு செய்யும் போது அதை துணிந்து திருத்தவும் முயற்சி செய்வீர்கள். சுறுசுறுப்பான மனநிலையைக் கொண்டிருப்பீர்கள். சரியான நேரத்திற்கு உணவருந்த மாட்டீர்கள். சேமிப்பில் ஆர்வம் கொண்டு செயல்படுவீர்கள். சுத்தமான ஆடை அணிவது உங்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயமாக இருக்கும். கல்வி உடையவர், ஒரு வழிப் போக்கர், விரைவில் கோபம் வந்து உடனே மாறும் குணம் உடையவர். முன்னும் பின்னும் பார்த்து நடப்பவர், உயர்ந்த உள்ளங்கால்களை உடையவர், பெண்களுக்கு இனியவர், வாசனைப் பொருட்களில் விருப்பம் உடையவர், மயிர் அழகர், உற்சாக முடையவர், சிக்கனத்தை கடைபிடிப்பவர், ஈகை குணம் இல்லாதவர். தெய்வீக வழிபாட்டில் பக்தியும், பெரியவர்களிடத்தில் மரியாதையும் கொண்டிருப்பர். பொது விஷயங்களில் ஆர்வத்துடன் பங்கேற்பர். மற்றவர்களைப் புரிந்து கொள்வதில் வல்லவர்கள். பிறருக்கு உதவி செய்யும் எண்ணம் கொண்டிருப்பர். நிலபுலன்களை அதிகம் பெற்றிருப்பர்.

அவிட்டம்:

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்போதும் சுறுசுறுப்பான மனநிலையைக் கொண்டவராய் இருப்பீர்கள். மற்றவர்களுக்கு பிரதிபலன் எதிர்பாராமல் உதவும் எண்ணம் கொண்டவர். உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் மிகுந்த கவனம் செலுத்துவீர்கள். மிகுந்த ஜாக்கிரதை உணர்வோடு செயல்படுவீர்கள். சிக்கனத்தில் அதிக நாட்டம் கொண்டிருப்பீர்கள். நெறியான தொழிலைச் செய்பவர், ஒருவருக்கும் பயப்படமாட்டார்கள், தியாகி, உயரமான நாசி உடையவர், ஒருவர் சொல்லையும் பொறுக்கமாட்டார். மாமிச பட்சண பிரியர், பெற்றோருக்கு விருப்பமானவர், பெண்களுக்கு இனியவர், செல்வம் உடையவர், அழகர், அறிவாளி, பிறரின் பொருளை அபகரிக்க மாட்டார்கள். செல்வவளமும் மக்கள் செல்வாக்கும் இவர்களுக்கு இருக்கும். கம்பீரமான தோற்றம் கொண்டிருப்பர். மனோதிடம் பெற்றிருப்பர். கோபம் இவர்களின் இயல்பாக இருந்தாலும் தேவையான விஷயங்களில் நிதானத்தையும் கடைபிடிப்பர். மனைவியின் பேச்சுக்கு மதிப்பளிப்பர்.

சதயம்:

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புத்தகங்களை படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பீர்கள். மற்றவர்களை கவரக்கூடிய குண நலன்களை கொண்டிருப்பீர்கள். உற்சாகமான மனநிலை கொண்டவராய் இருப்பீர்கள். கோபமான சொற்களை பொறுக்கமாட்டார். ரோகம் உடையவர், இனியவர், பக்திமான், கை, கால் வலுவுள்ளவன், அழகிய வாயை உடையவர், பொய் பேசமாட்டார். அரசர்க்கு இனியவர், நீராடுவதில் விருப்பம் உடையவர். பகைவரை வெல்பவர், செல்வம் உள்ளவர், வழக்கு உரைப்பவர். பார்ப்பதற்கு வசீகரமான தோற்றம் கொண்டிருப்பர். பால் பாக்கியம் பெற்று செல்வவளத் தோடு வாழ்வர். பொறுமை மிக்க இவர்கள், விசாலமான சிந்தனையுடன் செயல்படுவர். மனதில் எண்ணியதை நிறைவேற்றுவதில் வல்லவர்கள். தீர்க்கமான யோசனைக்குப் பிறகே செயலில் ஈடுபடுவர். செயல்களில் திறமையும், நல்ல நடத்தையும் கொண்டிருப்பர்.

பூரட்டாதி:

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களால் மதிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் கூடியவராய் இருக்கும் நீங்கள் அழகாக பேசுவீர்கள். சில சமயங்களில் உங்களுடைய சாதுர்யான பேச்சினால் மற்றவர்களிடம் உங்களுக்கான மதிப்பை பெற்றுவிடுவீர்கள். பொருள் சேமிப்பை விரும்புவீர்கள். எதிர்காலத்திற்கான திட்டங்களில் தெளிவாக வரையறுத்துக் கொண்டிருப்பீர்கள். உங்களின் முயற்சி வெற்றியடைய கடுமையான உழைப்பை வெளிப்படுத்த தயங்க மாட்டீர்கள். உங்களிடம் ஒப்படைக்கப்படும் செயல்களை முழுமூச்சுடன் செயல்பட்டு செய்து முடிப்பீர்கள். பிறர் சொல்லைப் பொறுக்க மாட்டார், வழக்குரைப்பார், பால், நெய், இவற்றில் விருப்பம் உடையவர், பெண்களுக்கு கவுரவம் வழங்கமாட்டார். கல்விமான், ஆசி கூறுபவர், அழகுடையவர், பக்திமான். மற்றவர்களின் மனதில் இருப்பதை அறிவதில் கெட்டிக்காரர்கள். திடமான மனமும், உடல் வலிமையும் பெற்றிருப்பர். சுக சவுகர்யங்களோடு வாழ்க்கை நடத்த விரும்புவர். மனைவியை மிகவும் நேசிப்பார்கள். பெரிய மனிதர்களிடம் நட்பு பாராட்டுவர். எல்லோரிடமும் சகஜமாகப் பழகுவர். தொழிலில் அக்கறையோடு ஈடுபடுவர்.

உத்திரட்டாதி:

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் அனைத்து செயல்களும் முழுமையாக முடிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை வலுவாக கொண்டவராய் இருப்பீர்கள். உங்களிடம் ஒப்படைக்கப்படும் எந்த காரியமும் முழுமையாக செய்துவிடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தை மிகவும் ஆர்வமாக பேணிக்காப்பீர்கள். எந்த சூழ்நிலையையும் சமாளிக்க்கூடிய மனநிலையை வளர்த்துவிரும்புவீர்கள். மற்றவர்களிடம் உண்மையான உழைப்பையும் நேர்மையான செயல்களையும் எதிர்பார்ப்பீர்கள். உங்களது நேர்மையான செயல்பாடுகளால் மற்றவர்களிடம் உங்களுக்கான மதிப்பை அதிகரித்து கொள்வீர்கள். மிகுந்த சுற்றத்தாரை உடையவர், கோள் சொல்லும் குணம் உடையவர், நீதிமான் பிறருக்கு உதவி செய்பவர், வித்தையில் விருப்பம் உடையவர், தாம்பூலப் பிரியர், நாடுகள் சுற்றுபவர், பரந்த காதும், பரந்த மார்பும் உடையவர், புத்திமான், பெண்களுக்கு இனியன், பொய்யன், பிறர் தொழிலை விரும்பி செய்பவர், நல்லவருக்கு நல்லவர். வழக்கை தொடுப்பதில் பலவான்.

ரேவதி:

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆள்பாதி ஆடைபாதி என்பதற்கு முழுஉதாரணமாய் உங்களது உடைகளையும் ஆபரணங்களையும் பேணிக் காப்பீர்கள். மற்றவர்களை கவரும் விதமாய் உங்களது செயல்பாடுகள் அமைத்துக் கொள்வீர்கள்ள. மனதிற்கு பிடித்தமான உணவு வகைகளை ருசித்து சாப்பிடுவீர்கள். மற்றவர்களால் புகழப்படும் காரியங்களை செய்வதில் அதிக ஆர்வம் கொண்டிருப்பீர்கள். பிராயணம் செய்வதிலும் அதிக நாட்டம் உடையவராய் இருப்பீர்கள். வருங்காலத்திற்கான சேமிப்பை மேற்கொள்வதில் அனைத்து வழிகளையும் பின்பற்றுவீர்கள். பெண்களிடம் பிரியம் உடையவர், பாதி நாள் மிகுந்த செல்வத்துடன் இருப்பார், நல்லவன், பிறர்சொல்கேட்பவர். நல்ல குணவான், அழகான கண்களை உடையவர், வாய் சாதுரியர், பிராமணர்களை வணங்கும் பக்தியுள்ளவர், புத்திமான், இரப்போருக்கு இல்லையென்று கூறாதவர், பழி பாவத்திற்கு அஞ்ச மாட்டான்.