ஸ்ரீ கருடபுராணத்தை வீட்டில் படிக்கலாமா?

டித்தால் / கேட்டால் குளிக்க வேண்டுமா? இறந்தவர் வீட்டில் மட்டும் தான் கூறவேண்டுமா? இதைப்போல் பல கேள்விகள், சந்தேகங்கள் பலருக்கு இருக்கிறது.

பகவானிடம் கருடன் கேட்ட கேள்விகளை விட, மிக அதிகமாகவே இவர்கள் கேட்டு மற்றவர்களை குழப்பி, தானும் குழம்புகின்றனர்.

ஒரு சாமியாரிடம், ஒரு சமையல் கலைஞர் வணங்கி, “மனம் மிகவும் சஞ்சலமாக இருக்கிறது. நீங்கள் தான் அருளவேண்டும்.” என்றார்.

சாமியார் கேட்டார், “நீ எந்த தொழில் செய்து கொண்டிருக்கிறாய்?”

அதற்கு அவர், “நான் சமையல் செய்கிறேன். அதுவும் 40 வருட அனுபவம்” என்றார்.

garuda

“அப்படியென்றால் சாம்பாருக்கும், ரசத்திற்கும் என்ன வித்தியாசம்? குழம்பு (சாம்பார்) ஏன் கலங்கலாகவும், ரசம் ஏன் தெளிவாகவும் உள்ளது?” என்று கேட்டார் சாமியார்.

சமையல்காரர் விழித்தார். சாமியாரே தொடர்ந்தார்.

“ரசத்தில் எந்த காயும் போடுவதில்லை. (தக்காளி இந்த காலத்தில் தான். அதுவும் மடிசமையலில் இல்லை) அதனால், தெளிவாக உள்ளது. குழம்பில் காய் போடுகிறோம். அதற்கு ‘தான்’  என்று பெயர். தான் இருப்பதால் (தான் என்ற அஹங்காரம்) குழம்பி உள்ளது. தான் என்று ஏதும் இல்லாத ரசம் தெளிவாக உள்ளது” என்று அவர் செய்யும் வேலை வைத்தே விளக்கம் அளித்தார்.

மனம் தெளிவாக இருந்தால் வாயு தேவர் அந்தர்யாமி பகவான்  எப்போதும் மனதில் இருந்து காப்பார், நல்வழி காட்டுவார்.

நம் வீட்டில் செய்யக்கூடடதை எல்லாம் செய்கிறோம். அப்போதெல்லாம் சாஸ்த்திரம் பார்ப்பதில்லையே? வீட்டு வரவேற்பறையில் உள்ள டிவியில் அந்திம சம்ஸ்காரங்கள் முழுவதையும் தொடரில் உன்னிப்பாக பார்க்கிறோம். சௌச ஆசமனங்களை முறையாக செய்யாமல், குல தர்மத்தை மறந்து விட்ட நிலையில், பகவான் ஸ்ரீ வேதவ்யாஸரால் அருளிய மாபெரும் பொக்கிஷம், ஸ்ரீ பகவானால் அவர் வாயாலேயே கூறப்பட்ட கருடபுராணத்தை கேட்டால் பாவமா? கேட்டுவிட்டால் குளிக்க வேண்டுமா?

ஸ்ரீ கிருஷ்ணரின் பகவத்கீதையை எப்படி படிக்கின்றோமோ, அதே போல, இதையும் தெரிந்து வைத்திருப்பது நல்லது தான்.

முக்கியமாக இறந்தவர் வீட்டில் மட்டும் சொல்வது என்பது மரபு. துக்க நேரத்தில் கேட்டால்தான் பெரியவர்களின் சம்ஸ்காரம் நன்றாக செய்வார்கள் என்பதால் வந்திருக்கலாம். வீட்டில் படித்தால் தப்பில்லை என்பது பெரியோர்கள் அபிப்ராயம். கேட்டாலோ, படித்தாலோ குளிக்கவேண்டும் என்பது தவறான கருத்து.