நவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் – 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் விவாதங்கள், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.

அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிவீர்கள். பழைய கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். சிலருக்கு வேற்றுமாநிலத்தில் வேலை அமையும்.

பழைய வீட்டை இடித்துக் கட்டத் தொடங்குவீர்கள். சகோதரங்களின் அரவணைப்பு அதிகரிக்கும். ஆனால் பேச்சில் கடுமை காட்டாதீர்கள். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். மாதத்தின் மையப்பகுதியிலிருந்து அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். திடீர் பணவரவு உண்டு. உறவினர் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்வீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். அரசியல்வாதிகளே! எந்த கோஷ்டியிலும் சேராமல் நடுநிலையாக இருக்கப்பாருங்கள்.

god-vishnu-images

கன்னிப் பெண்களே! உங்களின் புதுத் திட்டங்களை பெற்றோர் ஆதரிப்பார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். பங்குதாரர்கள், வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோத்தில் உங்களின் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். கலைத்துறையினர்களே! பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவிற்கு பிரபலமாவீர்கள். மாறுபட்ட பாதையில் சென்று முன்னேறும் மாதமிது.

அதிஷ்ட தேதிகள்: 5, 8, 15, 14, 24
அதிஷ்ட எண்கள்: 1, 7
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஆலிவ் பச்சை
அதிஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *