உங்கள் கையில் இந்த ரேகைகள் இருக்கா? அப்ப நீங்கள்தான் ரொம்ப அதிர்ஷ்டசாலி பாஸ்!

ஒருவரின் எதிர்காலம், அதிர்ஷ்டம் போன்றவை எப்படி இருக்கும் என்பதை பழங்காலத்தில் கைரேகைகளைக் கொண்டு ஜோதிடர்கள் கணித்து வந்தனர்.

இவை நம்பும்படியாக இல்லாவிட்டாலும், ஒருவர் நம் கைரேகைகளைக் கொண்டு நம் எதிர்காலத்தைக் கணித்துக் கூறும் போது, அதைத் தெரிந்துகொள்ள ஒவ்வொருவருக்கும் ஆவல் இருக்கும்.

மேலும் கைரேகைகளானது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். கையில் உள்ள 4 முக்கிய ரேகைகளைத் தவிர, சிலருக்கு நடுவிரல் மற்றும் மோதிர விரல்களுக்கு அடியில் வளைந்த நிலையில் ஒரு ரேகை செல்லும்.

இப்போது அந்த ரேகைப் பற்றியும்,இதய ரேகையைப் பற்றியும் காண்போம்.

 

  • இப்படி நடுவிரல் மற்றும் மோதிர விரல்களுக்கு அடியே வளைந்தவாறு செல்லும் ரேகை ஒரு வட்ட வளையத்தை உருவாக்கும்.இது தான் சுக்கிர வளையம் அல்லது காதல் பெல்ட்.ஒருவேளை இந்த ரேகை இல்லாவிட்டால் கவலைப்பட வேண்டும். இது அனைவருக்குமே இருக்காது. மிகவும் சென்சிடிவ்வானவர்கள் மற்றும் காதல்பிரச்சனைகளை சந்திப்பவர்களுக்கு தான் இருக்கும்

  • கையில் உள்ள முக்கிய ரேகைகளில் ஒன்று தான் இதய ரேகை. இந்த ரேகை சுண்டு விரலின் கீழே ஆரம்பமாகி நடுவிரல் அல்லது ஆள்காட்டிவிரலை நோக்கி சென்றவாறு இருக்கும்.

  • உங்களுக்கு படத்தில் காட்டப்பட்டவாறு, இதய ரேகை நடுவிரலின் மேலே ஏறுவது போன்று இருந்தால், நீங்கள் மிகவும் புத்திசாலி, லட்சியக்காரர் மற்றும் யாரையும் சார்ந்த வாழ விரும்பாதவர்களாக இருப்பர். ஆனால் நீங்கள் எடுக்கும் எந்த ஒரு முடிவும் சிறப்பானதாக இருக்கும் மற்றும் சுயநலவாதியாக இருப்பர்.

  • ஒருவேளை உங்கள் இதய ரேகை படத்தில் காட்டப்பட்டவாறு நடுவிரல் மற்றும் ஆள்காட்டி விரல்களுக்கு இடையே சென்றால், கருணை உள்ளம் மற்றும் நம்பிக்கையுள்ளவர்களாக இருப்பர். அதே சமயம் அதிக உணர்ச்சிவசப்படுவீர்கள்.

  • இதய ரேகை ஆள்காட்டி விரலின் மேலே ஏறினால், நீங்கள் உங்கள் காதல் வாழ்க்கையில் நம்பிக்கையுள்ளவர்களாக இருப்பர். முக்கியமாக இந்த வகையினர் எந்த ஒரு கஷ்டமான சூழ்நிலையிலும், மனம் தளராமல் எதிர்கொள்வர் மற்றும் எப்போதும் சந்தோஷமாக இருப்பர்.

 

  • இந்த வகையான இதய ரேகையைக் கொண்டவர்கள், பொறுமைசாலி, அக்கறையுள்ளவர்கள், அமைதியானவர்கள் மற்றும் அநியாயத்திற்கு நல்லவர்களாக இருப்பர். மொத்தத்தில் தன்னலமின்றி, பிறர் நலத்தில் மிகுந்த அக்கறை கொண்டவர்களாக இருப்பர்.
One Comment

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *