நவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் – 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதம் எதிர்ப்புகள் அடங்கும். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள்.

அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். தாய்மாமன், அத்தை வகையில் மதிப்பு, மரியாதைக் கூடும். தாய்வழி சொத்து கைக்கு வரும். மகள் உங்களைப் புரிந்துக் கொள்வாள்.

மகனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். வேற்றுமதத்தவர்கள் அறிமுகமாவார்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். உங்கள் ரசனைக் கேற்ப வாகனம் வாங்குவீர்கள். சகோதரங்கள் உங்கள் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள். பழைய கடனில் ஒருபகுதியை தீர்க்க வழி பிறக்கும். யாரை நம்புவது, நம்பாமல் இருப்பது போன்ற குழப்பங்கள் வரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அரசியல்வாதிகளே! எதிர்கட்சிக்காரர்கள் உதவுவார்கள்.
gh
கன்னிப் பெண்களே! காதல் இனிக்கும். எதிர்பார்த்தைப் போல் நல்ல வரன் அமையும். வியாபாரம் செழிக்கும். போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். கலைத்துறையினர்களே! உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளும் முயற்சியில் இறங்குவீர்கள். வெற்றிப் பாதையில் பயணிக்கும் மாதமிது.
அதிஷ்ட தேதிகள்: 3, 1, 9, 10, 27
அதிஷ்ட எண்கள்: 3, 9
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மஞ்சள்
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி