நோய்கள் நீங்கிட, நலன்கள் பெருகிட பயனுள்ள ஸ்லோகம்

நோய்கள் வராமல் காத்திடவும், நலன்கள் பெருகிடவும் பயனுள்ள ராமர் ஸ்லோகத்தை பார்க்கலாம்.

ஜடாகலாப சோபிதம் ஸமஸ்த பாப நாசகம்
ஸ்வபக்தபீதி பஞ்ஜனம் பஜேஹம் ராமமத்வயம்
நிஜஸ்வரூப போதகம் க்ருபாகரம் பயாபஹம்
ஸமம் சிவம் நிரஞ்ஜனம் பஜேஹராமமத்வயம்

– ஸ்ரீராம புஜங்காஷ்டகம்

kuberan

பொதுப்பொருள்:

அழகான ஜடை முடியைக் கொண்டவரே, எல்லா பாவங்களையும் போக்கும் பெருநிதியே, அனைத்து பக்தர்களையும் காத்து சந்தோஷம் அளிப்பவரே, இணையற்ற எம்பெருமானே, ஸ்ரீராமா, உம்மை உளமாற வணங்குகிறேன். ஆத்மாவின் வடிவை உணரச் செய்த அற்புத நாயகனே, கருணைக்கடலே, ஜனன மரண பயத்தையும், உடல் வேதனையையும் நீக்கி, நோய் நொடியற்ற தீர்க்காயுளை அருளும் தயாபரனே, எந்த தோஷமும் தீண்ட இயலாதவரே, ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியே, தங்களை நமஸ்கரிக்கிறேன்.