அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் நீலம்பூர் Near Bypass Rd, Tamil Nadu 641062
கோவை மாவட்டம் - சூலூர் வட்டம் - நீலம்பூர் கிராமம் அருள்மிகு மாரியம்மன், அருள்மிகு அரசடி செல்வ விநாயகர், அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி உடனமர் ஸ்ரீ மாயவப்பெருமாள் திருக்கோயில்கள் திருநெறிய தெய்வத்தமிழ் திருக்குட நன்னீராட்டுப் பெருஞ்சாந்திப் பெருவிழா அழைப்பிதழ் நாள் : ஐப்பசி 03 (20.10.2023) வெள்ளிக்கிழமை நேரம்: காலை 8.00 மணிமுதல் 9.30 மணிக்குள் வாரந்தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமை செவ்வாய்க்கிழமையில் மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபடலாம். நம்மளால முடிந்த பொருட்களும் மாரியம்மன் கோவிலுக்கு வாங்கி கொடுக்கலாம். அபிஷேகத்திற்கு பால், இளநீர், தேன் போன்ற பொருட்களை வாங்கி கொடுக்கலாம். அலங்காரம் செய்ய அழகான புடவையையுமே வாங்கி கொடுக்கலாம்.
மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா 12 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வெகு விமரிசையாக நடந்தது.
கொங்குத்திருநாட்டில் நீலம்பூர் திருநகரில் அருட்பொலிவுடன் ஆட்சி செய்து வரும் அன்னை அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் திருப்பணிகள் செய்யும் பொருட்டு திருமதில்கள் கருங்கல்லில் அமைத்தும் திருக்கோயில் முழுவதும் பளிங்கு கற்கள் அமைத்தும் அருள்மிகு விநாயகர் அருள்மிகு முருகனுக்கு புதிய விமானத்துடன் சந்நிதி அமைத்தும் மாரியம்மனுக்கு சால கோபுரம் அமைத்தும் அமுது மடம், அலுவலக அறை ஆகியன புதியதாக அமைத்தும் மாரியம்மனுக்கு புதியதாக திருச்சுற்று தெய்வங்கள் நிறுவியும் திருக்கோயில் முழுவதும் பழுது நீக்கி வண்ணம் வைத்து மிகப்பொலிவுடன் திருப்பணிகள் செவ்வனே நிறைவு பெற்றுள்ளன. அதேபோல் பாற்கடலில் பள்ளிதுயிலும் பரந்தாமன் இவ்வூரில் அருள்மிகு ஸ்ரீ மாய்வப்பெருமாள் என்கிற திருநாமத்தோடு ஸ்ரீதேவி பூதேவி உடனிருந்து நின்ற திருக்கோலத்தில் அருள்வழங்குகிறார். இத்திருக்கோயிலில் கருவறை அர்த்தமண்டபம், மகாமண்டபம் அனைத்தும் பழுது நீக்கி பளிங்கு கற்கள் அமைத்து வண்ணம் வைத்தும் மிகப்பொலிவுடன் திருப்பணிகள் செவ்வனே நிறைவு பெற்றுள்ளன. இவ்விரு திருக்கோயில்களுக்கும் தனித்தனியாக யாகசாலைகள் அமைத்து திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நிகழும் மங்களகரமான சோபகிருது ஆண்டு ஐப்பசித்திங்கள் 3 ஆம் நாள் ( 20.10.2023) வெள்ளிக்கிழமை சஷ்டி திதியும் மூலம் நட்சத்திரமும், அமிர்த யோகமும் கூடிய நன்னாளில் காலை 8.00 மணிக்குமேல் 9.30 மணிக்குள் விருச்சிக லக்கினத்தில் நடைபெறவுள்ளது. இவ்வினிய விழாவில் மன்னியசீர் மாரிஅன்னை. மாயவன் தாள் பணிந்த சிந்தையராய் திருவருளுக்கும் குருமகாசந்நிதானங்களின் குரு வருளுக்கும் தாங்கள் வருகை தந்து உரியவர்களாக அன்புடன் அழைக்கின்றோம்..
Upcoming Events:
Facebook & Youtube Live
வரும் செவ்வாய் 4 மணியிலிருந்து வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் நிகழ்வுகளை நேரலையில் காண
ADS